சென்னை: போகி பண்டிகையில், பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.. புகையில்லாமல் போகியை கொண்டாட தமிழ்நாடு மக்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும். புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் […]