14.2 கோடி போச்சா? சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர் விஜய் ஹசாரேவில் என்ன செய்தார்?

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14.2 கோடிக்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் வீர் என்ற இளம் வீரரை வாங்கியது. இந்த செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. யார் இந்த பிரசாந்த் வீர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும் அதிகமானது. கடந்தாண்டு வரை அனுபவம் வாய்ந்த வீரர்களை நம்பி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு இளம் வீரர்களை நம்பி களமிறங்கியுள்ளது. இத்தனை கோடிக்கு சென்னை அணி வாங்கி உள்ளதால் பிரசாந்த் வீர் விஜய் ஹசாரே டிராபில் என்ன செய்வார் என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. 

Add Zee News as a Preferred Source

Big game. Big stage. Captain steps 

Chase planned to perfection 

Tournament turnaround unlocked 

Centurion-skipper Harvik Desai breaks down their Quarter-Final win over Uttar Pradesh  – By @jigsactin #VijayHazareTrophy | @IDFCFIRSTBank | @harvik_desai pic.twitter.com/9TOnKFouat

— BCCI Domestic (@BCCIdomestic) January 13, 2026

விஜய் ஹசாரே டிராபி 

விஜய் ஹசாரே டிராபின் கால் இறுதிச்சுற்றில் சௌராஷ்டிரா அணி உத்திரபிரதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பிரசாந்த் பீர் பந்துவீச்சில் ஓரளவிற்கு சிறப்பாக வீசி இருந்தாலும் அணியின் தோல்வியை அவரால் காப்பாற்ற முடியவில்லை. பெங்களூரில் நடைபெற்ற இந்த இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்தரப்பிரதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் அடித்தது. சிறிது கடினமான இலக்கு என்றாலும் சௌராஷ்டிரா அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. 

உத்திரபிரதேச அணி வெற்றி 

மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இறுதியில் சௌராஷ்டிரா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த கால் இறுதி போட்டியில் 20 வயதான பிரசாந்த் வீர் மொத்தம் 9 ஓவர்கள் பந்து வீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். மறுபுறம் சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாட வெற்றி அவர்களது பக்கம் திரும்பியது. சௌராஷ்டிரா அணியின் வெற்றிக்கு ஹர்விக் தேசாய் முக்கிய காரணமாக இருந்தார். 116 பந்துகளில் 100 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போல சிராக் ஜானி 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். மறுபுறம் உத்தரப் பிரதேச அணியில் சமீர் ரிஸ்வி (95) மற்றும் நிதிஷ் ராணா (54) அடித்து இருந்தனர்.

அடுத்தது என்ன?

இந்த வெற்றியின் மூலம் சௌராஷ்டிரா அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம், கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கிய உத்தர பிரதேசம், காலிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பிரசாந்த் வீர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், ஐபிஎல்லில் எப்படி விளையாடுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.