IND vs NZ: இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் (ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
Add Zee News as a Preferred Source
India vs New Zealand 1st ODI: இந்தியாவுக்கு 301 ரன்கள் இலக்கு
வதோதரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணிதான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் சரியாக 300 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 84, ஹென்ரி நிகோலஸ் 62, டேவான் கான்வே 56 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
Virat Kohli: விராட் கோலி அசத்தல் பேட்டிங்
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், அதனை 49 ஓவர்களிலேயே அடித்து வெற்றியை பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களும் அடித்தனர். இதனால் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று சொந்த மண்ணின் ஆதிக்கத்தை காட்டி உள்ளனர். இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 14) நடைபெற இருக்கிறது.
Washington Sundar Ruled Out: வாஷிங்டன் சுந்தர் விலகல்
இந்த சூழலில், முக்கிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தசை பிடிப்பு காரணமாக அவதிபட்டு வரும் நிலையில், அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் ஆகி உள்ளது. அவர் தொடரை விலகலாம் என கூறப்படுகிறது. அதேபோல் நாளைய போட்டியில் பிரஷித் கிருஷ்ணாவை வெளியே அமர வைத்துவிட்டு அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பளிக்கலாம் என தெரிகிறது.
Two Changes In India Playing XI: இந்தியா பிளேயிங் 11ல் இரண்டு மாற்றங்கள்
வாஷிங்டன் சுந்தர் வெளியேறும் பட்சத்தில் இந்திய அணிக்கு பேட்டிங் ஆடுவதற்கு ஒரு வீரர் தேவை என்பதால் துருவ் ஜுரேலை கொண்டு வரலாம். துருவ் ஜுரேல் ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறிய பின்னர் அவருக்கு பதிலாக வந்தார். இந்த சூழலில், அவருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்க உள்ளதாக தெரிகிறது.
Virat Kohli: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல் முதல் போட்டியில் விராட் கோலி சதத்தை தவறவிட்டார். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடிப்பார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர்.
IND vs NZ 2nd ODI Venue And Time: போட்டி நடக்கும் இடம் மற்றும் நேரம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி நாளை (ஜனவரி 14) மதியம் 1.30 மணி அளவில் தொடங்கும்.
India Predicted Playing XI For 2nd Odi Against New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டிக்கான இந்தியாவின் உத்தேச பிளேயிங் 11
ரோஹித் சர்மா, சுப்மான் கில் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
About the Author
R Balaji