டி20 உலகக் கோப்பை: திலக் வர்மாவுக்கு மாற்றாக இந்த CSK வீரரால் இருக்க முடியாது – முழு விவரம்!

Tilak Varma Replacemant In T20 World Cup 2026: இந்திய டி20 அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா. இவருக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கிய விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென காயம் ஏற்பட்டு களத்தில் இருந்து வெளியேறினார். 

Add Zee News as a Preferred Source

India vs New Zealand T20 Series: நியூசிலாந்து தொடரில் இருந்து விலகிய திலக் வர்மா 

இந்த காயம் காரணமாக இம்மாதம் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகி உள்ளார். இப்போதைக்கு அவர் அத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் மீதமுள்ள மூன்று போட்டிகளில் விளையாடுவாரா என்பது பின்னர் முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா? 

இதனால் திலக் வர்மா டி20 உலகக் கோப்பையில் விளையடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திலக் வர்மா தற்போதுள்ள காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு நாட்கள் எடுக்கும் என தெரிகிறது. எனவே இந்திய அணி அவருக்கு பதிலாக ஒரு மாற்று வீரரை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது யாராக இருக்கும் என்று ரசிகர்கள் தற்போதில் இருந்தே விவாதித்து வருகின்றனர். 

Irfan Pathan: முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கருத்து 

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் திலக் வர்மா விளையாடவில்லை என்றால் அவருக்கு சரியான மாற்று வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தான் என முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். 

Shreyas Iyer: ஸ்ரேயாஸ் ஐயர்தான் சரியான மாற்று வீரர் 

இது தொடர்பாக பேசிய அவர், தற்போது காயத்தால் அவதிபட்டு வரும் வீரர்களை இந்திய அணி கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. இதனை இந்திய அணி எப்படி களையப்போகிறது என்பதை சிந்திக்க வேண்டும். திலக் வர்மா தற்போது காயத்தால் அவதிபட்டு வருகிறார். ஒருவேளை அவர் டி20 உலகக்கோப்பையில் விளையாடவில்லை என்றால் அவருக்கு சரியான மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என நான் நினைக்கிறேன். Aவரிடம் நல்ல அனுபவம் உள்ளது. ஐபிஎல்லில் பஞ்சாப் அணியை வழிநடத்துகிறார். அதனால் அவரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறேன். 

No Ruturaj, yashasvi jaiswal: ருதுராஜ், ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரரகள்

ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்வாட் போன்றவர்கள் தொடக்க வீரர்கள். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் பக்கா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். எனவே அவரே சரியான வீரராக இருப்பார் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 

India Squad For T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.