சென்னை: தமிழர் திருநாளான, பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டில், பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் கணித்து வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் என்பது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட இந்து அறுவடைத் திருவிழாக்களில் ஒன்றாகும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, ஊரெல்லாம் பசுமையாகவும், செழிப்பாகவும் காட்சியளிக்கும். மேலும் இந்த சமயம் அறுவடை காலம் என்பதால் உழவுத்தொழிலுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் […]