CSK சஞ்சு சாம்சனை வாங்கியதன் உண்மை காரணம் இதுதான்.. முழு விவரம்!

Chennai Super Kings Latest News: ஐபிஎல் தொடர் இன்னும் 3 மாதங்களில் தொடங்க இருக்கிறது. அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை மார்ச் 08ஆம் தேதி முடிவடைகிறது. அதன்பின் அனைத்து வீரர்களும் ஐபிஎல்லுக்காக தனது பயிற்சிகளை தொடங்குவார்கள். 2026 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதில் இருந்தே அதிகரித்து வருகிறது. காரணம் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை மினி ஏலத்தில் எடுத்தது. முக்கிய வீரர்கள் பலர் அணிகள் மாறி உள்ளனர். 

Add Zee News as a Preferred Source

CSK Fans Confused: சிஎஸ்கே முடிவால் ரசிகர்கள் குழப்பம் 

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை வர்த்தகம் மூலம் மினி ஏலத்திற்கு முன்பாகவே வாங்கியது. அதற்கு விலையாக சாம் கரன் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை கொடுத்தது. சிஎஸ்கே அணியின் ஒரு தூணாக இருந்த ஜடேஜாவை வெளியேற்றியது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு, ஒரு கேள்வியையும் எழுப்பியது. அதாவது சிஎஸ்கே அணியின் முகமாக இருந்த ஜடேஜாவை கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி ரசிகர்களுக்கு இடையே எழுந்தது. 

IPL 2026: ஐபிஎல் வெறு கிரிக்கெட் மட்டுமல்ல

இந்த நிலையில், இதற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை பகிந்துள்ளார் ஹனுமா விஹாரி. அவர் இது வெறும் கிரிக்கெட் தொடர்பானது மட்டுமல்ல என அதிர்ச்சியான விஷயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய அவர், முதலில் ஐபிஎல் தொடரானது ஒரு விளையாட்டு மட்டுமே என நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய தவறு. ஒவ்வொரு அணி உரிமையாளர்களும் கிரிக்கெட்டை தாண்டி சிந்திக்கிறார்கள். அணியில் இருக்கும் வீரர்கள் வர்த்தக ரீதியாக எப்படி உதவுகிறார்கள் என்பது முக்கியம். அணிக்கு அதனால் எவ்வளவு மதிப்பு கிடைக்கும் என்பது முக்கியம். 

Sanju Samson: சஞ்சு சாம்சன் எங்கு இருந்தாலும் ரசிகர்கள் ஆதரிப்பார்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்கியதன் முக்கிய காரணம் அவரது முக மதிப்பு தான் (Face Value). சஞ்சு சாம்சனுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். கேரளா ரசிகர்கள் அவர் எந்த அணிக்காக விளையாடினால் சப்போர்ட் செய்வார்கள். அதனை சிஎஸ்கே தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துக்கொள்ள நினைத்து அவரை வர்த்தகம் செய்துள்ளனர். 

CSK – Sanju Samson: சிஎஸ்கே அணியின் அடுத்த முகம் சஞ்சு சாம்சன் 

சொல்லப்போனால் உண்மையில் சிஎஸ்கே அணிக்கு தொடக்க வீரர் தேவையில்லை. அங்கு ஏற்கனவே கேப்டன் ருதுராஜ் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரரும் கிடையாது. அவர் 3வது இடத்தில்தான் களமிறங்குவார். எனவே சஞ்சு சாம்சனை முழுக்க முழுக்க வியாபார நோக்குடனே எடுத்துள்ளனர். அவரை அடுத்த சிஎஸ்கே அணியின் முகமாக மாற்றவே இந்த முடிவு என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். 

CSK Full Squad: 2026 ஐபிஎல்லுக்கான சிஎஸ்கே அணி வீரர்கள் 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.