டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி குறித்து வெளிநாட்டு வீரர்கள் சிலர் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் காற்று மாசு மற்றும் சுகாதார குறைபாடுகள் பற்றி பேசியுள்ளனர். உலக தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருக்கும் ஆண்டர்ஸ் ஆன்டன்சன், டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகினார். இதே காரணத்தால் அவர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்திய ஓபனை தவிர்த்துள்ளார். இதுகுறித்து […]