மேற்கு ஆப்ரிக்க நாடான கேபானில், இரவு நேரங்களில் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் கோபம் அடைவார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, இந்த யானைகள் உணவுக்காக மட்டும் அல்ல, உடல்நலக் காரணங்களுக்காகவும் பயிர்களைத் தேடி வருகிறார்கள் என்று தெரிவிக்கிறது. விவசாயிகள் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், யானைகள் வாழை, பப்பாளி செடிகளின் இலைகள் மற்றும் தண்டுகளை மட்டும் தின்றுவிட்டு, சாப்பிடக்கூடிய பழங்களை தரையில் உடைத்துவிட்டு செல்கின்றன. “பழங்களை […]