IPL 2026: ஐபிஎல் தொடர் இந்திய மக்களால் மட்டும் ரசிக்கப்படமால் உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்படும் ஒரு டி20 லீக் தொடராக இருந்து வருகிறது. இத்தொடருக்கு பொதுவாகவே எதிர்பார்ப்பு இருக்கும். இந்த சூழலில், சமீபத்தில் வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கிக்கொண்டனர். அந்த வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்தது.
Add Zee News as a Preferred Source
அவர்கள் மினி ஏலத்தில் டேவிட் மில்லர் (ரூ. 2 கோடி), பென் டக்கெட் (ரூ. 2 கோடி), அவுகிப் நபி தர் (ரூ. 8.4 கோடி), பாதும் நிஸ்ஸங்கா (ரூ. 4 கோடி), லுங்கி நிகிடி (ரூ. 2 கோடி), சாஹில் பராக் (ரூ. 30 லட்சம்), பிரித்வி ஷா (ரூ. 75 லட்சம்), கைல் ஜேமிசன் (ரூ. 2 கோடி) என மொத்தம் 8 வீரர்களை வாங்கியது. இதில் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் விரும்பி எடுத்துக்கொண்டது டெல்லி அணி. ஆனால் இதில் யாருக்கு பிளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக தெரியவில்லை. இதுவே ரசிகர்களின் விவாதமாக இருக்கிறது.
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிளேயிங் 11ல் இடம் பெற வாய்ப்புள்ள 4 வெளிநாட்டு வீரர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
மிட்செல் ஸ்டார்க்
டெல்லி கேபிடல்ஸ் அணி மிட்செல் ஸ்டார்க்கை 2025 மினி ஏலத்தில் ரூ. 11.75 கோடிக்கு வாங்கியது. இதையடுத்து அந்த அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்டார். இவர் கடந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்களை வீழ்த்தினார். இவர் உலகின் டாப் பவுலர்களில் ஒருவர் என்பதால் டெல்லி அணி நிச்சயம் பெஞ்சில் அமர வைக்காது. இவருக்கு பிளேயிங் 11ல் ஒரு இடம் எப்போதும் இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரராக இருப்பவர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ். இவரது அதிரடி அந்த அணிக்கு பலமுறை கைக்கொடுத்துள்ளது. எனவே இவருக்கான இடம் என்பது பிளேயிங் 11ல் நிச்சயம் இருக்கும். இதுவரை 32 போட்டிகளில் விளையாடியுள்ளார், 41.47 என்ற சராசரியிலும் 163.19 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 705 ரன்களைக் குவித்துள்ளார்.
பென் டக்கெட்
டெல்லி கேபிடல்ஸ் அணி பென் டக்கெட்டை மினி ஏலத்தில் ரூ. 2 கோடிக்கு வாங்கியது. இவர் அந்த அணியின் ஓப்பனிங் பிரச்சனையை தீர்பார் என்ற எதிர்பார்ப்பில் எடுத்துள்ளது டிசி அணி. இதனால் இவர் டெல்லி அணியின் பிளேயிங் 11ல் பென் டக்கெட் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டேவிட் மில்லர்
டெல்லி கேபிடல்ஸ் அணி டேவிட் மில்லரை ரூ. 2 கோடிக்கு வாங்கியது. இவர் கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய அவர் வரும் ஐபிஎல் தொடரில் டிசி அணிக்காக களமிறங்க உள்ளார். இவர் ஒரு பவர் ஹிட்டர் என்பதால் அவரை டெல்லி அணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேவிட் மில்லர் இதுவரை 141 போட்டிகளில் 35.77 சராசரியாகவும், 138.60 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 3,077 ரன்கள் எடுத்துள்ளார்.
Delhi Capitals Full Squad IPL 2026: டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர்கள் விவரம்
நிதிஷ் ராணா, அபிஷேக் போரல், அஜய் மண்டல், அசுதோஷ் ஷர்மா, அக்சர் படேல், துஷ்மந்த சமீரா, கருண் நாயர், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, டி நடராஜன், திரிபுரானா விஜய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் பாட்டீப் நிகாம், டேவிட் பாட்டீப் நிகம் நிசாங்கா, லுங்கி என்கிடி, சாஹில் பராக், பிருத்வி ஷா, கைல் ஜேமிசன்.
About the Author
R Balaji