டெல்லி: ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிரடியாக தலையிட்டு ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் ஐ-பிஏசி மனு மீது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது, மம்தா பானர்ஜியின் நடவடிக்கையால், சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி உள்ளதாகவும் சுட்டிக்காட்டியது. அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகம், அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் […]