வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக வரும் பிரபல வீரர்? டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்- முழு விவரம்!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஜனவரி 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சுப்மன் கில் வழிநடத்தி வருகிறார். இதையடுத்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடரில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்த வீரர்களே விளையாடுவார் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது. 

Add Zee News as a Preferred Source

IND vs NZ Washington Sundar Ruled Out: நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்

இந்த சூழலில், டி20 அணியில் இடம் பிடித்த வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்துள்ளார். அவர் முதல் ஒருநாள் போட்டியின்போது காயமடைந்து வெளியேறினார். அவருக்கு விலா எலும்பில் காயமடைந்ததால் அதில் இருந்து குணமடைய நாட்கள் எடுக்கும். எனவே அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளார். 

Washington Sundar replacement: வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரர் யார்? 

வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் தொடரில் இருந்து விலகியபோது, அவருக்கு மாற்று வீரராக ஆயூஷ் பதோனி கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில், டி20 தொடரில் அவருக்கு மாற்று வீரர் யார்? என்ற கேள்வி எழும்பி உள்ளது. ஆனால் அந்த இடத்திற்கு 3 பேர் போட்டியில் உள்ளதால் அணி நிர்வாகம் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளது. அதாவது ரியான் பராக், சபாஷ் அகமது மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Riyan Parag: மாற்று வீரராக ரியான் பராக்? 

ஆனால் இதில் ரியான் பராக்கை தேர்வு செய்ய இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ரியான் பராக்கை அணியில் கொண்டு வரும் நிலையில், பேட்டிங் வரிசை பலமடையும். அதேசமயம் அவரால் பகுதிநேர பந்துவீச்சாளராகவும் செயல்பட முடியும் என்பதால் அவருக்கு முன்னுரிமை கொடுக்க நிர்வாகம் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையிலும் விளையாடப்போகும் வீரர்

வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரராக தேர்வாகும் வீரர் நியூசிலாந்து டி20 தொடர் மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பையிலும் அவருக்கு பதிலாக விளையாடுவார் என கூறப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் குணமாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது. அதனால் அவர் டி20 உலகக் கோப்பையில் இருந்தும் விலக வாய்ப்புள்ளதாகவும் எனவே ரியான் பராக், சபாஷ் அகமது மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரில் ஒருவர் தேர்வாகும் நிலையில், அவர் டி20 உலகக் கோப்பையில் அவருக்கு மாற்றாக செயல்படுவார் என கூறப்படுகிறது. 

இந்த மூவரில் ரியான் பராக்தான் தேர்வாவார் என கூறப்படுகிறது. இருப்பினும் அணி நிர்வாகத்தில் முடிவிற்காக நாம் காத்திருக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் இதற்கான விடை தெரிந்துவிடும். 

New Zealand Series and T20 World Cup India Squad: நியூசிலாந்து தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.