U19 உலகக் கோப்பை தொடர் கடந்த நேற்று முன்தினம் (ஜனவரி 15) தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இந்திய அணி இதுவரை ஒருபோட்டியில் விளையாடி உள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான அப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Add Zee News as a Preferred Source
இந்த சூழலில், இன்று (ஜனவரி 17) வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிக்யான் குண்டு 80 ரன்கள்ளும் வைபவ் சூரியவன்சி 72 ரன்களையும் குவித்தனர். இந்த நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி உலக சாதனை படைத்து அசத்தி உள்ளார்.
அவர் U19 உலகக் கோப்பை வரலாற்றில் அரைசதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 15 வயதை கடப்பதற்கு முன்னரே உலகக் கோப்பையில் அரைசதம் அடித்த உலகின் முதல் இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் சூரியவன்சி பெற்றர். மேலும், யூத் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்தியர்களின் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
வைபவ் சூர்யவன்சி 20 போட்டிகளிலேயே 1047 ரன்களை குவித்துள்ளார். ஆனால் விராட் கோலி யு 19 போட்டிகளில் 28 ஆட்டங்களில் 978 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதன் மூலம் யூத் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த 3வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் முதலில் சுப்மன் கில் 13 இன்னிங்ஸ், இரண்டாவது இடத்தில் உன்முக் சந்த் 17 இன்னிங்ஸ் என அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
வைபவ் சூர்யவன்சி சமீபமாக தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறார். தொடர்ந்து அசத்தலாக விளையாடும் அவர் விரைவில் இந்திய அணியிலும் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
R Balaji