IND vs NZ: தொடரை இழந்தால் இப்படி ஒரு சோகமா? இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து  அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது தொடர் 1-1 என்ற சமநிலையில் இருப்பதால், இன்று இந்தூரில் நடைபெறும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடரை வெல்ல இரு அணிகளும் தயாரான நிலையில் உள்ளனர். 

Add Zee News as a Preferred Source

About time for The Decider 

 Indore
 1:30 PM IST
https://t.co/hIL8Vefajg
 Official BCCI App #TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/V7Af7TG5Zc

— BCCI (@BCCI) January 18, 2026

வரலாற்று சாதனை 

இந்திய மண்ணில் ஒரு நாள் தொடரை வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்க நியூசிலாந்து அணிக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பாகும். இதுவரை இந்திய மண்ணில் ஏழு முறை முயற்சி செய்தும் அவர்களால் ஒரு நாள் தொடரை வெற்றி பெற முடியவில்லை. கடந்தாண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த நியூசிலாந்து அணி, தற்போது ஒரு நாள் தொடரவும் வெல்ல தயாராகி வருகிறது. டேரி மிச்சல், வில் யங் போன்ற வீரர்கள் நியூசிலாந்து அணிக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர். கடந்த போட்டியில் சதம் அடித்த டேரி மிச்சல் இந்த போட்டியிலும் இந்திய அணி பவுலர்களை துவம்சம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வெற்றி பெறுமா?

இந்திய அணியின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்பார்ப்பில் இருப்பது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் மீதுதான். முதல் போட்டியில் 93 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்ட விராட் கோலி இன்றைய போட்டியில் சதம் அடிப்பாரா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே சமயம் ரோகித் சர்மா கடந்த இரண்டு போட்டிகளிலும் தேவையான ரன்களை அடிக்கவில்லை. எனவே அவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்த கேப்டன் சுப்மன் கில் இன்றைய போட்டியில் அணிக்கு  பக்கபலமாக இருப்பாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தூரில் உள்ள மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் இரண்டு அணிகளிலும் ரன் பொலிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சில் சொதப்பல் 

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இருந்தபோதிலும் விக்கெட்களை எடுக்க முடியவில்லை. கடந்த இரண்டு போட்டிகளாக பிளேயிங் லெவலில் இடம்பெறாத அர்ஸ்தீப் சிங் இன்றைய போட்டியில் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வந்தாலும், இன்றைய போட்டியை வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பது கவுதம் கம்பீரின் குறிக்கோளாக உள்ளது

இந்தியா உத்தேச பிளேயிங் 11

ரோகித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.