Indian Cricket Team Latest News: 2026 டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி மாதம் 07ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இம்முறை இந்திய மண்ணில் நடைபெறுகிறது. அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளிலும் நடந்த கடந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், இம்முறை அதனை தக்கவைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
Add Zee News as a Preferred Source
India vs New Zealand T20 Series: உலகக் கோப்பைக்கு முன்பாக நியூசிலாந்து தொடர்
இந்திய அணியும் அதற்கேற்றவாறு தயாராகி வருகிறது. சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி கடந்த 2024 உலகக் கோப்பைக்கு பின்னர் நடைபெற்ற எந்த டி20 தொடரையும் இழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது உலகக் கோப்பைக்கு முன்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் இருக்கும் பெரிய பிரச்சனை குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசி உள்ளார்.
Dinesh Karthik: டெத் ஓவர் பிரச்சனை
இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் கார்த்திக், இந்திய அணி கடந்த உலகக் கோப்பைக்கு பின்னர் 36 டி20 போட்டிகளில் 29ல் வென்றுள்ளது. இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியை மூன்று முறை வீழ்த்தி அசத்தியது. இருப்பினும் இந்திய அணியின் டெத் பவுலிங் கவலை அளிக்கிறது. அணியின் காம்பினேஷன் சவாலாக இருக்கிறது. இந்திய அணியின் மைதானங்கள் பெரும்பாலும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
Indian Team Weakness: இந்திய அணியின் பலவீனம்
வேகப்பந்து வீச்சில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளனர். மூன்றாவது பந்து வீச்சாளராக சிவம் துபே இருக்கிறார். ஒருவேளை ஆட்டம் கடைசி வரை சென்றால் பனிப்பொழிவால் சுழல் பந்து வீச்சு எடுபடவில்லை என்றால் இந்தியாவுக்கு அது பெரிய பிரச்சனையாக மாறக்கூடும். இது மட்டுமே இந்திய அணியின் பலவீனமாக உள்ளது. மற்றபடி மிகவும் பலமாகவே உள்ளது என தினேஷ் கார்த்திக் கூறினார்.
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இதனால் நாளுக்கு நாள் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்திய அணி குரூப் ஏ பிரிவில் உள்ளது. இந்திய அணியுடன் பாகிஸ்தான், நபிபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன.
India Squad For T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
இந்த அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் திலக் வர்மா ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.