பாதிக்கு பாதி விலையில் டாப் ஸ்மார்ட்போன்கள் விற்பனை.. Amazon சூப்பர் டீல், தவறவிட்டுடாதீங்க

Top Best Smartphone Deals On Amazon: Amazon Great Republic Day விற்பனையில் சிறந்த போன்களில் மீது பல்வேறு டீல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, இதனால் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற மாற்று வழிகளை சுதந்திரமாகத் தேர்வுசெய்ய முடியும். இந்த விற்பனையில் இடம்பெற்று இருக்கும் ஸ்மார்ட்போன்களின் விவரத்தை இங்கே காணலாம்.

Add Zee News as a Preferred Source

OnePlus Nord CE 5 – விலை – ரூ.24,499

OnePlus Nord CE 5 தற்போது Amazon Great Republic Day விற்பனையில் ரூ. 24,499க்கு விற்பனை செய்யப்படுறது, ரூ. 28,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த ஸ்மார்ட்போனில் சுமார் ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. இது நடுத்தர விலைப்பிரிவில் வரும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். குறைந்த விலையில் ஒரு பிரீமியம் ஒன்பிளஸ் அனுபவத்தை விரும்பும் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன், சிறந்த கேமரா திறன்கள் மற்றும் வேகமான சார்ஜிங் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

Samsung Galaxy A55 5G – விலை –  ரூ.28,998

Samsung Galaxy A55 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை ரூ. 48,999 ஆக Amazon Great Republic Day விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 28,998க்கு வாங்கலாம். பாதிக்கு பாதி விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு பிரீமியம் போன் பிரிவில் வருகிறது. இந்தத் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே இதில் இருக்கும் உறுதியான வடிவமைப்புத் தரம், நம்பகமான செயல்திறன் மற்றும் நீண்ட கால மென்பொருள் ஆகும்.

OnePlus 13R – விலை –  ரூ.38,999

OnePlus 13R ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 44,999-லிருந்து குறைக்கப்பட்டு ரூ. 38,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதன்மை ரக போன்களுக்கு இணையான செயல்திறனை வழங்குகிறது.

Samsung Galaxy M36 5G – விலை –  ரூ.18,499

Samsung Galaxy M36 5G ஸ்மார்ட்போனின் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. முன்னதாக ரூ. 26,999க்கு விற்பனை செய்யப்பட்டுருந்த இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 18,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு கம்மி விலையில் இந்த போனில் நீங்கள் 5G இணைப்பு, நம்பகமான செயல்திறன் மற்றும் பெரிய பேட்டரியை பெறுவீர்கள்.

Realme Narzo 80 Lite 5G – விலை –  ரூ.7,898

Realme Narzo 80 Lite 5G ஸ்மார்ட்போன் இப்போது 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் பதிப்பு ரூ.8,999-லிருந்து குறைக்கப்பட்டு ரூ.7,898-க்கும், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் பதிப்பு ரூ.10,498-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது சந்தையில் உள்ள மிகவும் மலிவு விலை கிடைக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.

Amazon Great Republic Day

Amazon தற்போது Great Republic Day Sale 2026 விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையானது கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்ஃபோன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவி-க்கள், கேமராக்கள், வயர்லெஸ் ஸ்பீக்கர்கள், ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) ஹெட்செட்ஸ் மற்றும் ஸ்மார்ட் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். 

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.