பான் கார்டை ஆன்லைனில் ஆக்டிவேட் செய்வது எப்படி? முக்கிய அப்டேட்

PAN card : வருமான வரித்துறையின் விதிகளின்படி, உங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN) செயலில் இருப்பது மிக அவசியம். இல்லையெனில், வங்கிப் பரிவர்த்தனைகள் முதல் சொத்து வாங்குவது வரை பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எனவே, உங்களின் PAN கார்டு செயலில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளுங்கள். வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் (e-filing) இணையதளத்தில் ஒரு சில நிமிடங்களில் சரிபார்க்கலாம். ஏனென்றால், முறையான ஆவணங்கள் இல்லாத பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் பான்  கார்டு ஆக்டிவில் இருப்பதை சரிபார்ப்பது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம் 

Add Zee News as a Preferred Source

பான் கார்டு ஸ்டேட்டஸை சரிபார்ப்பது எப்படி?

– Income Tax e-filing இணையதளத்திற்குச் செல்லவும்.
– முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Quick Links’ பிரிவில் ‘Verify PAN Status’ என்பதை கிளிக் செய்யவும்.
– உங்கள் PAN எண், முழுப் பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு ‘Continue’ கொடுக்கவும்.
– உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு ‘Validate’ என்பதை கிளிக் செய்யவும்.
– இப்போது உங்கள் PAN கார்டு செயலில் உள்ளதா (Active) அல்லது இல்லையா என்பது திரையில் தோன்றும்.

PAN கார்டு முடக்கப்பட (Inoperative) முக்கிய காரணங்கள்:

– பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயம். தவறினால் அது முடக்கப்படும்.
– ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட PAN கார்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு இருந்தால் கூடுதல் கார்டுகள் முடக்கப்படும்.
– பெயர் அல்லது பிறந்த தேதியில் ஆதாருக்கும் பானுக்கும் இடையே முரண்பாடு இருந்தால் அது முடக்கப்படலாம்.

PAN கார்டு முடக்கப்பட்டால் ஏற்படும் சிக்கல்கள்:

– புதிய வங்கி கணக்கு தொடங்குவது, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பெறுவதில் சிக்கல் வரலாம். ரூ. 50,000-க்கு மேல் ரொக்க டெபாசிட் செய்வது மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்குகளில் ரூ. 50,000-க்கு மேல் முதலீடு செய்வது, ரூ. 10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை வாங்குவது அல்லது விற்பதில் சிக்கல் வரும். டிடி (DD) அல்லது பேங்கர்ஸ் செக் எடுக்க ரூ. 50,000-க்கு மேல் ரொக்கமாக செலுத்துவது, பான் கார்டு முடக்கப்பட்டால், சாதாரண வரியை விட அதிக வரி பிடித்தம் செய்யப்படும். 

PAN-ஐ மீண்டும் ஆக்டிவேட் எப்படி?

ஆதாருடன் இணைக்காமல் முடக்கப்பட்டிருந்தால், ரூ. 1,000 அபராதம் செலுத்த வேண்டும். இ-ஃபைலிங் தளத்தில் ‘e-Pay Tax’ மூலம் அபராதத்தைச் செலுத்திவிட்டு, ‘Link Aadhaar’ வசதியைப் பயன்படுத்தி இணைக்கலாம். விண்ணப்பித்த 30 நாட்களுக்குப் பிறகே உங்கள் PAN கார்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். இதர காரணங்களால் முடக்கப்பட்டிருந்தால், அதாவது, உங்கள் பகுதிக்கு உட்பட்ட வருமான வரி அதிகாரியை (Assessing Officer – AO) அணுகி கடிதம் எழுத வேண்டும். அதனுடன் முந்தைய 3 ஆண்டுகளின் வருமான வரித் தாக்கல் (ITR) நகல்கள் மற்றும் பிற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரி திருப்தியடைந்தால் 15-30 நாட்களில் PAN மீண்டும் ஆக்டிவேட் ஆகிவிடும்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.