மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்? – வதோதராவில் இன்று மோதல்

வதோதரா,

5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 12-வது லீக்கில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்சுடன் மல்லுகட்டுகிறது.

தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் ஏறக்குறைய ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்து விடும். அதே சமயம் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று கம்பீரமாக தொடங்கிய குஜராத் அணி அடுத்த இரு ஆட்டங்களில் தோற்று இப்போது 4 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே 32 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.