சென்னை: முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலர்களை கழிவறையில் வீடியோ எடுத்ததாக காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரமக்குடியில் அரங்கேறி உள்ளது. இது பெண் காவல்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமது துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என காட்டமாக கூறி உள்ளார். […]