மாட்ரிட்,
ஸ்பெயினில் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இது அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்றது.
அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற அரசால் நடத்தப்படும் ரெயில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பயணிகள், ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறும்போது, சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன.
இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில் தடம் புரண்டபோது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று இருந்தது என சிலர் கூறினர். ரெயிலுக்குள் புகையும் பரவியுள்ளது என சில பயணிகள் தெரிவித்தனர்.
அந்த தனியார் நிறுவன அதிவிரைவு ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.