3 போட்டிகளில் வெறும் 61 ரன்கள்.. இனி ரோகித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்குமா? கம்பீரின் பிளான் என்ன?

இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரும் முன்னாள் கேப்டனுமான ரோகித் சர்மா தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் 2025 மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த சூழலில், வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் பயணித்து வருகிறார். 

Add Zee News as a Preferred Source

Rohit Sharma: சொதப்பிய ரோகித் சர்மா

ரோகித் சர்மாவை ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தார். ஆனால் அவருக்கு அழுத்தம் கொடுத்து அந்த பதிவியில் இருந்து விலகி சுப்மன் கில் தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்கி வருகிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். அவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் வயது காரணம் கொண்டு அணியை விட்டும் வெளியேற்ற முயற்சித்து வருகிறார். இந்த சூழலில், ரோகித் சர்மா தற்போது முடிவடைந்துள்ள நியூசிலாந்து ஒருநாள் போட்டியில் குறைவான ரன்களை சேர்த்துள்ளார். இது ரசிகர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

Gautam Gambhir: கம்பீர் என்ன செய்யபோகிறார்? 

2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து விளையாடி வரும் ரோகித் சர்மாவை நியூசிலாந்து தொடரில் சொதப்பியதால் கம்பீர் வெளியேற்றி விடுவாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு முன்பாக நடந்த தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்னர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீது மிகப்பெரிய கேள்வி இருந்தது. அவர்கள் அவர்களை நிரூபிப்பார்களா? 2027 உலகக் கோப்பை வரை விளையாட என்ன செய்ய இருக்கிறார்கள் போன்ற கேள்விகள் அவர்களின் முன்னே இருந்தன. ஆனால் தென்னாப்பிரிக்கா தொடரின் மூலம் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்குமாறு ரன்களை குவித்தனர். 

Virat Kohli: செம ஃபார்மில் இருக்கும் விராட் கோலி

ஆனால் தற்போது நியூசிலாந்து தொடரில் சொதப்பி இருக்கிறார் ரோகித் சர்மா. விராட் கோலியை பொறுத்தவரையில் அவர் அதே ஃபார்மில் இருக்கிறார். சதங்கள் அடித்து தான் இல்லாமல் 2027 உலகக் கோப்பைக்கு செல்ல முடியாது என்ற பதிலை இந்திய அணி நிர்வாகத்திற்கு அளித்திருக்கிறார். ஆனால் மறுபுறம் ரோகித் சர்மாவின் நிலை என்ன என்பது கேள்வியாகி உள்ளது. அவர் வரும் போட்டிகளில் விளையாடுவாரா? ரன்களை குறைவாக அடித்த காரணத்தை கொண்டு அவரை கம்பீர் அணியில் இருந்து நீக்க முயல்வாரார் போன்ற அச்சங்கள் எழுந்துள்ளன. 

Upcoming ODI Matches: ஐபிஎல்லுக்கு பின்னர்தான் ஒருநாள் போட்டிகள்

இந்திய அணிக்கு தற்போதைக்கு ஒருநாள் போட்டிகள் ஏதும் இல்லை. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னரே ஒருநாள் தொடர்கள் உள்ளன. எனவே ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வாய்ப்பளித்து அவர் அதிலும் சொதப்பும் பட்சத்தில் அவரை வெளியேற்றும் முடிவை எடுப்பார்கள் என தெரிகிறது. 

2027 ODI World Cup: உலகக் கோப்பையில் ரோகித்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் 

மறுபுறம் அவர் இல்லாமல் எப்படி இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையில் சமாளிக்கப்போகிறது என்ற கேள்வியும் உள்ளது. 2027 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா போன்று பவுன்ஸ் ஆகும் பிட்சில் ரோகித் சர்மாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அவருக்கே உறுத்தான் புல் ஷாட்டை அதிகம் காண முடியும். தொடக்க வீரராக எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாற முடியும் என்பதால் அவரை 2027 உலகக் கோப்பை வரை அணியில் வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது. 

Yashasvi Jaiswal: ரோகித் இல்லையென்றால் அந்த இடத்தில் யார்? 

இருப்பினும், ரோகித் சர்மா வரும் ஒருநாள் போட்டிகளில் ரன்களை குவிப்பதை வைத்தே அவருக்கு நிர்வாகம் அடுத்தடுத்த வாய்ப்புகளை அளிக்கும். ரோகித் சர்மா இல்லையென்றால் தொடக்க வீரராக யாரை இந்திய அணி களமிறக்குவார்கள்? அந்த இடத்திற்கு கட்சிதமாக பொருந்தக்கூடியவர் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால்தான். அவரின் அதிரடி இந்திய அணிக்கு பெரிதாக கைகொடுக்கும். தற்போது பேக்கப் வீரராக இருக்கும் அவர் வரும் காலத்தில் இந்திய ஒருநாள் அணியின் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.