ஆப்கானிஸ்தான்: காபூலில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு

காபூல்,

காபூலில் நடந்த குண்டு வெடிப்பு, காபூல் நகரின் நான்காவது மாவட்டத்தில் உள்ள குல்பரோஷி தெருவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டல் அருகே ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு உடனடியாக பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர், அப்துல் மதீன் குவானி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஆரம்பகட்ட தகவல்படி, பலர் கொல்லப்பட்டு, காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார். வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் இந்த, ஷார்-இ-நவ் பகுதி, காபூலின் மிக பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த இடத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் மட்டும் காபூல் நகரில் இரண்டு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி மாதத்தில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீடமைப்பு அமைச்சகத்துக்குள் நுழைய முயன்ற ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர்.

அதே வாரத்தில், வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு வங்கியின் வெளியே தற்கொலைத் தாக்குதலாளர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த தொடர் சம்பவங்கள், நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.