சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிச்சாமி, பாஜக வானதி மற்றும் பாமக எம்எல்ஏக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி புறக்கணித்த நிலையில், சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார். இதைத்தொடர்ந்து, அவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் […]