யூடியூப் புதிய விதிகள்! பணம் கொட்ட இந்த 7 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

YouTube : 2026 ஆம் ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில், இளைஞர்கள் பலரும் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்வதை எல்லாம் விடுத்து சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என களமிறங்கியுள்ளனர். அவரவர் திறமைகளுக்கு ஏற்ப சொந்த தொழில் செய்ய தொடங்கியுள்ள அதேவேளையில், யூடியூப்பிலும் கால்பதிக்க தொடங்கியுள்ளனர். யூடியூப்பில் வீடியோ போட்டவுடனேயே பணம் வந்துவிடுமா? என்றால் நிச்சயம் இல்லை. அதற்கு முறையான திட்டமிடலும், யூடியூப்பின் புதிய விதிகளை அறிந்து வைத்து, அதனை பின்பற்றுவதும் அவசியம். எனவே, யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி, 2025-2026ல் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

யூடியூப் மானிடைசேஷன் என்றால் என்ன?

நீங்கள் பதிவிடும் வீடியோக்களில் விளம்பரங்களைக் காண்பித்து, அதன் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை யூடியூப் உங்களுக்கு வழங்கும். இதுவே ‘யூடியூப் பார்ட்னர் புரோகிராம்’ (YPP) என்று அழைக்கப்படுகிறது.

எப்படித் தொடங்குவது?

உங்களின் ஒரு செல்போன், மொபைல் நம்பர், இமெயில் இருந்தால் யூடியூப் சேனல் தொடங்கிவிட முடியும். ஆனால், அது பிறருக்கு கற்றுக்கொடுக்கும் வகையிலும், உங்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். உங்கள் யூடியூப் பக்கத்துடன் முறையான வங்கி கணக்கை இணைக்க கூகுள் ஆட்சென்ஸ் கணக்கு அவசியம்.

வருமானம் பெறத் தேவையான தகுதிகள்

யூடியூப்பில் வருமானம் ஈட்ட அடிப்படை விதிமுறைகள் உள்ளன. கடந்த 12 மாதங்களில் 1,000 சந்தாதாரர்கள் மற்றும் 4,000 மணிநேரப் பார்வை நேரம் இருக்க வேண்டும். அல்லது, 90 நாட்களில் 10 மில்லியன் ஷார்ட்ஸ் பார்வைகள் பெற்றிருக்க வேண்டும். 500 சந்தாதாரர்கள் மற்றும் 3 வீடியோக்கள் பதிவேற்றியிருக்க வேண்டும். இதன் மூலம் சூப்பர் சாட், மெம்பர்ஷிப் போன்ற வசதிகள் கிடைக்கும்.

எதற்கெல்லாம் பணம் கிடைக்காது?

ஜூலை 15, 2025 முதல் யூடியூப் புதிய “Inauthentic Content” கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்கள், வாய்ஸ் ஓவர் இல்லாமல் வெறும் ‘டெக்ஸ்ட் டு ஸ்பீச்’ மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள், சொந்த குரல் அல்லது முகம் காட்டாத ரியாக்ஷன் வீடியோக்கள், Copyright மீறப்பட்ட இசை மற்றும் காட்சிகள் உள்ள வீடியோக்களுக்கு பணம் கிடைக்காது.

வருமானத்தை அதிகரிக்க ‘ஹைப்ரிட் ஸ்ட்ரேட்டஜி’

நிலையான வருமானம் ஈட்ட நீளமான வீடியோக்கள் அவசியம். வாரம் இரண்டு நீளமான வீடியோக்கள், அதாவது 7-10 நிமிடம் மற்றும் மூன்று குறுகிய வீடியோக்கள் (Shorts) பதிவிடுவது உங்கள் சேனலை வலிமையாக்கும்.

கூடுதல் வருமானம் ஈட்டும் வழிகள்

கூடுதல் வருமானம் ஈட்ட Affiliate Marketing செய்யலாம். நீங்கள் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றி வீடியோ போட்டு, அதன் லிங்க்-ஐ (Product Link) கொடுத்தால், அதன் மூலம் நடக்கும் விற்பனையில் 2% முதல் 10% வரை கமிஷன் பெறலாம். உங்கள் சேனலிலேயே யூடியூப் ஸ்டோர் என்ற டிஜிட்டல் கடைகளை உருவாக்கி பொருட்களை விற்கலாம்.

வீடியோ போடும் முன் சரிபார்க்க வேண்டிய 7 விஷயங்கள்

1. உண்மையான குரலும் முகமும் உள்ளதா?
2. இசை காப்புரிமை பெறப்பட்டதா?
3. AI பயன்பாடு அளவுக்கு அதிகமாக உள்ளதா?
4. வீடியோவின் தலைப்பும் படமும் (Thumbnail) உண்மையானதா?
5. சிறுவர்களுக்கானதா (Made for Kids) என்பதைச் சரியாகக் குறிப்பிட்டுள்ளீர்களா?
6. பணம் பெற்ற விளம்பரமா (Paid Promotion)?
7. முறையான விளக்கக் குறிப்புகள் (Captions) உள்ளனவா?

என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். யூடியூப் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, கடின உழைப்பும் முறையான திட்டமிடலும் இருந்தால், பணம் சம்பாதித்து கொடுக்கும் ஆகச்சிறந்த தொழில். எனவே, மேலே சொல்லப்பட்டுள்ள யுக்திகளை பின்பற்றினால் நீங்களும் ஒரு வெற்றிகரமான யூடியூப்பராக மாற முடியும்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.