இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. நாளை புதன்கிழமை டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நாள் தொடரில் இடம் பெற்ற பல வீரர்கள் டி20 அணியில் இடம் பெறவில்லை. மேலும் காயம் காரணமாகவும் சில வீரர்கள் அணியிலிருந்து விலகி உள்ளனர்.
Add Zee News as a Preferred Source

சீனியர் வீரர்கள் இல்லை
ஒரு நாள் தொடரில் இடம் பெற்றிருந்த சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 அணியில் இல்லை. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு பிறகு அவர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் தொடங்க உள்ள டி20 உலக கோப்பையில் சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம் இந்திய அணி களமிறங்க உள்ளது. அதுவும் சொந்த மண்ணில் நடைபெற உள்ளதால் இந்த தொடரில் இந்திய அணி எப்படி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சஞ்சு சாம்சன் – அபிஷேக் ஷர்மா
ஆசிய கோப்பை மற்றும் ஒரு சில டி20 தொடர்களில் சுப்மன் கில் துணை கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால் அவரிடம் இருந்து போதுமான ரன்கள் வராததால், டி20 உலக கோப்பைக்காண அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 உலக கோப்பைக்காண அணி தான் நியூசிலாந்திற்கு எதிரான தொடரிலும் விளையாட உள்ளது. இந்த தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக்சர்மா ஜோடி தொடக்க வீரராக களமிறங்க உள்ளனர். சஞ்சு சாம்சனிற்கு பேக்கப் ஆக இஷான் கிசன் அணியில் இடம் பெற்றுள்ளார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவரை தொடர்ந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் டி20 அணிக்கு திரும்பியுள்ளார். திலக் வர்மா காயம் காரணமாக விலகி உள்ளதால், அவருக்கு பதில் இணைந்துள்ளார். இவர்களுடன் ஆல்ரவுண்டர் சிவம் துபே, அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர். ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா டி20 அணிக்கு திரும்பி இருப்பது அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது. ஹர்திக் பாண்டியா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. சுழற் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னாய் அணியில் இணைந்துள்ளனர். சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி எப்படி விளையாட உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரின்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய்.
About the Author
RK Spark