மதுரை: மதுரையில் கோயில் இடத்தை ஆக்கிரமித்து தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு உள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, முன்னாள் திமுக தென்மண்ட செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏற்கனவே மு.க.அழகிரியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். இதையடுத்து வழக்கு பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது மகன் […]