விஜ்க் ஆன் ஜீ,
டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, சக நாட்டவரும், உலக சாம்பியனுமான குகேசை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தின் குகேஷ் 34-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா கண்டார்.
இதேபோல் பிரக்ஞானந்தா (இந்தியா) – தாய் டான் வான் (செக்குடியரசு), அரவிந்த் சிதம்பரம் (இந்தியா) – நோடிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்), ஹான்ஸ் மோக் நிமான் (அமெரிக்கா) – யாஜிஸ் கான் எர்டோமுஸ் (துருக்கி) ஆகியோர் மோதிய ஆட்டங்களும் டிராவானது. 3-வது சுற்று முடிவில் அர்ஜுன் எரிகைசி, ஹான்ஸ் மோக் நிமான் உள்பட 5 வீரர்கள் தலா 2 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.