CSK-வில் ஜடேஜாவுக்கு பதில் இந்த வீரர் கிடையாது.. பிளானை மாற்றும் ருதுராஜ்! உள்ளே வரும் இளம் வீரர்

Chennai Super Kings Latest News: 2026 ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளன. பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்கி மார்ச் 09ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து அனைத்து வீரர்களும் ஐபிஎல்லை மனதில் வைத்து பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவர். இதற்கிடையில் நடக்கும் டி20 உலகக் கோப்பை, தற்போது நடைபெற்று வரும் SA20 தொடர் ஆகியவற்றை வைத்து ஐபிஎல் அணிகள் எந்த வீரரை பிளேயிங் 11ல் கொண்டு வரலாம் போன்ற முடிவை ஓரளவுக்கு எடுத்துவிடும். 

Add Zee News as a Preferred Source

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் 

டிசம்பர் மாதம் மினி ஏலம் நடைபெற்றதால் ஐபிஎல் அணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த வீரருக்கு பிளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா போன்ற முக்கிய வீரர் வெளியேறி இருப்பதால் அவரது இடத்தை நிரப்பப்போகும் வீரர் யாராக இருக்கும் என்ற யூகங்களை ரசிகர்கள் வகுத்து வருகின்றனர். 

Akeal Hosein: சொதப்பிய அகீல் ஹொசைன்

அந்த வகையில் SA20 தொடர் தொடங்கிய போது சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட அகீல் ஹொசைன் சிறப்பாக பந்து வீசி ஒரு போட்டியில் பேட்டிங்கிலும் 10 பந்துகளில் 22 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் ஜடேஜாவுக்கு மாற்றாக அவர் சரியான வீரராக இருப்பார் என பேசப்பட்டது. ஆனால் தற்போது SA20 பிளே ஆஃப் சுற்றை எட்டியுள்ள நிலையில், அவர் கூறும் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

Akeal Hosein SA20 Performance: SA20 தொடரில் அகீல் ஹொசைன் செயல்திறன் 

இதுவரை SA20 தொடரில் அகீல் ஹொசைன் 10 போட்டிகளில் விளையாடி 45 ரன்கள் மற்றும் 6 விக்கெட்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது சற்று ஏமாற்றமாக இருப்பதால் சிஎஸ்கே இவரை ஜடேஜாவுக்கு மாற்றாக எடுக்க யோசிக்கும். நிச்சயமாக ஐபிஎல் தொடர் நெருங்கி வரும்போது இது குறித்த பேச்சுவார்த்தையை கேப்டன் ருதுராஜ், சீனியர் வீரர் தோனி மற்றும் அணி நிர்வாகம் நடத்தும். 

Prashant Veer ஜடேஜாவுக்கு சரியான மாற்று வீரர் யார்?

அகீல் ஹொசைன் இல்லை என்றால் ஜடேஜாவுக்கு சரியான மாற்று வீரர் யார் என்ற கேள்வி எழும்புகிறது. அவருக்கு சரியாக மாற்று வீரராக மினி ஏலத்தில் ரூ. 14 கோடிக்கு எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர்ராக இருப்பார் என தெரிகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 

Prashant Veer performance in vijay hazare trophy: விஜய் ஹசாரே தொடரில் பிரசாந்த் வீர்

ஒருபோட்டியில் அவர் 18 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார். பிரசாந்த் வீர் 7 போட்டிகளில் பேட்டிங் செய்து 133 ரன்களை சேர்த்துள்ளார். பந்து வீச்சில் 9 போட்டிகளில் 11 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி உள்ளார். மேலும், இவர் விஜய் ஹசாரே டிராபிக்கு முன்பாக நடந்த சையத் அலி டிராபியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் ஜடேஜாவின் இடத்திற்கு பிரசாந்த் வீர் சரியான வீரராக இருப்பார் என தெரிகிறது. 

CSK Full Squad 2026 IPL: 2026 ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணி 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஷர்மான், பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.

CSK Predicted Playing XI For IPL 2026: சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11 கணிப்பு 

ஆயூஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சிவம் துபே, பிரசாந்த் வீர், எம்.எஸ். தோனி, டெவால்ட் ப்ரீவிஸ், நூர் அகமது, கலீல் அகமது, மாட் ஹென்றி,  ஜேமி ஓவர்டன். 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.