Eggless Cakes: `டூட்டி ஃப்ரூட்டி கேக்' – அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

டூட்டி ஃப்ரூட்டி கேக்

தேவையானவை:

மைதா அல்லது கோதுமை மாவு – ஒன்றரை கப்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

பொடித்த சர்க்கரை – ஒரு கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

ரிஃபைண்ட் எண்ணெய் – அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன்

கெட்டித் தயிர் – ஒரு கப்

உலர் திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்

டூட்டி ஃப்ரூட்டி – 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கி பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சுத் தோல் – 2 டேபிள்ஸ்பூன் (இது ORANGE PEEL என்கிற பெயரில் கடைகளில் கிடைக்கும்)

டூட்டி ஃப்ரூட்டி கேக்

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். ஒரு பேக்கிங் பானில் நன்றாக எண்ணெய் தடவி வைக்கவும். மைதா அல்லது கோதுமை மாவை இரண்டு முறை சலித்து எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் மாவுடன் உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, நறுக்கிய ஆரஞ்சுத் தோல் ஆகியவற்றை கலந்து தனியாக வைக்கவும்.

தயிரை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இரண்டையும் கலந்து நன்றாக அடிக்கவும். அதை அப்படியே ஐந்து நிமிடங்கள் தனியாக வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அது நன்றாக நுரைத்து இருக்கும். பின்னர் அதனுடன் அரை கப் எண்ணெய், வெனிலா எசென்ஸ், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு இதனுடன் சலித்துவைத்த மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்து தனியாகக் கலந்து வைத்த உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சுத் தோல் ஆகியவற்றையும் மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்த கேக் கலவையை எண்ணெய் தடவிய பேக்கிங் பானில் ஊற்றவும்.

பேக்கிங் பானை ஓவனில் வைத்து 45 நிமிடங்கள் அல்லது கேக் நன்றாக பேக் ஆகும் வரை வைத்து பின்னர் எடுக்கவும்.

பண்டைய எகிப்தில் கேக், ரொட்டி ஆகியவை இறை வழிபாட்டில் படைக்கப்படும் புனிதப் பொருளாகவே கருதப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.