Bangladesh Cricket News: ICC T20 உலகக்கோப்பையைச் சுற்றி நிலவி வந்த சர்ச்சைகள் குறித்து, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், வங்கதேச நேரப்படி இன்று மதியம் 3:00 மணிக்கு வீரர்களைச் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில், வங்கதேசம் உலகக்கோப்பையில் விளையாடுமா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
Add Zee News as a Preferred Source
வங்கதேச கிரிக்கெட் வாரியம் அளித்த விளக்கம் என்ன?
இது குறித்து BCB இயக்குனர் அமினுல் இஸ்லாம் புல்புல் கூறுகையில், “எங்கள் அரசாங்கத்துடன் இறுதி பேச்சுவார்த்தை நடத்த ICC-யிடம் கால அவகாசம் கேட்டுள்ளேன். அவர்கள் எனக்கு 24 முதல் 48 மணிநேரம் வரை அவகாசம் அளித்துள்ளனர். அரசாங்கத்திற்கு நான் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இந்தியா எங்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை நாங்கள் அறிவோம். இலங்கையில் விளையாட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ICC எங்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது எனக்குத் தெரியும், இருந்தாலும் அரசாங்கத்திடம் மீண்டும் ஒருமுறை பேசுவோம்.”
அவர் மேலும் கூறுகையில், “ஏதாவது ஒரு அதிசயம் நடக்கும் என்று ICC-யிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். உலகக்கோப்பையில் விளையாட யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? வீரர்கள் மற்றும் அரசாங்கம் இருவருமே விளையாட விரும்புகிறார்கள். ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு சூழல் குறித்து கவலை உள்ளது. அரசாங்கம் முடிவெடுக்கும் போது அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா vs வங்கதேசம் : என்ன தான் பிரச்சனை?
வங்கதேசம் தனது போட்டிகளை இந்தியாவில் விளையாட விரும்பவில்லை, அதற்கு பதிலாக இலங்கையில் விளையாடக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் தற்போது சுமுகமாக இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ICC தனது முடிவில் உறுதியாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. இது விவாதங்களைத் தூண்டியுள்ளது. அதே நேரத்தில் போட்டி அட்டவணை எந்த மாற்றமும் இன்றி அப்படியே உள்ளது. வங்கதேசம் விளையாட வேண்டுமானால், ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியாவில்தான் விளையாட வேண்டும். போட்டிகளை இலங்கைக்கு மாற்ற முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
T20 உலகக்கோப்பை யாருக்கு வாய்ப்பு?
ஒருவேளை வங்கதேச அரசாங்கம் அனுமதி அளிக்காமல், அந்த அணி தொடரில் இருந்து விலகினால், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து (Scotland) அணி T20 உலகக்கோப்பையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 24 முதல் 48 மணிநேரத்திற்குள் வங்கதேசத்தின் இறுதி முடிவு தெரியவரும்.
வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு
பாகிஸ்தான் கொள்கை அடிப்படையில் வங்கதேசத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்தது. ஏனெனில், இந்தியாவின் வற்புறுத்தலால், பாகிஸ்தானில் நடைபெறவிருந்த போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டன. ஆனால் அதே காரணத்தை வங்கதேசம் கூறியபோது அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது ஏமாற்றமளிக்கிறது என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டதாக டெலிகாம் ஆசியா ஸ்போர்ட் தெரிவித்துள்ளன.
ஐசிசி முடிவுகள் இந்தியாவுக்கு சாதகம்- கம்ரான்
ஐசிசியின் முடிவு குறித்த ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கம்ரான் கூறியுள்ளார். ஐசிசியின் இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டதே என்று கூறிய அவர், ” ஐசிசியின் பெரும்பாலான முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கின்றன. இது நடக்கக்கூடாது. ஏனெனில் அனைத்து உறுப்பு நாடுகள் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்று கம்ரான் டெலிகாம் ஆசியா ஸ்போர்ட்டிடம் கூறியுள்ளார்.
About the Author

Shiva Murugesan
Shiva Murugesan
…Read More