சென்னை: கறிக்கோழி விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததை கண்டித்து, சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக அரசு விவசாயிகள் பக்கம் இல்லை, “முதலாளிகள் பக்கம்தான்” நிற்கிறது என்று குற்றம் சாட்டினார்,. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை […]