Chennai Super Kings Latest News: ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்கள் இருந்தாலும். அதன் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், நடந்த மினி ஏலத்தில் சில பெரிய வீரர்கள் அணி மாறி இருக்கின்றனர். இதனால் பிளேயிங் 11 எந்த மாதிரி இருக்கும். யாருக்கு இடம் கிடைக்கும் போன்ற யூகங்களை ரசிகர்கள் இப்போதில் இருந்தே வகுத்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11 குறித்து அந்த அணியின் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபல வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் sa20 தொடரில் அதிரடி காட்டி தனது அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Add Zee News as a Preferred Source
Dewald Brevis Form: மோசமான ஃபார்மால் விமர்சனம்
அதிரடியையே தனது பாணியாக கொண்ட டெவால்ட் ப்ரீவிஸ் sa20 தொடரின் தொடக்கத்தில் சற்று தடுமாறினார். இதனால் அவருக்கு வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. சிலர் அவருக்கு பதிலாக வேறு வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என கூறி வந்தனர். இந்த நிலையில், தனது மேல் இருக்கும் விமர்சனங்களை துடைத்தெரிந்துள்ளார் டெவால்ட் ப்ரீவிஸ்.
Dewald Brevis In SA20 League: SA20ல் டெவால் ப்ரீவிஸ் அதிரடி ஆட்டம்
தென்னாப்பிரிக்காவில் டி20 லீக் தொடர் நடந்து வருகிறது. இத்தொடரில் டெவால்ட் ப்ரீவிஸ் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணி நேற்று (ஜனவரி 21) சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்ற நிலையில் இருந்தது.
இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்து 170 ரன்கள் அடித்தது. இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி அதனை 18.3 ஓவர்களில் அடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில் டெவால்ட் ப்ரீவிஸ் 7 சிக்சர்கள், 4 பவுண்டர்கள் என 38 பந்துகளில் 75 ரன்களை குவித்து அசத்தினார்.
CSK Dewald Brevis: தனது இடத்தை உறுதி செய்த டெவால் ப்ரீவிஸ்
இதன்மூலம் கிட்டத்தட்ட சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11ல் தனது இடத்தை மேலும் உறுதி படுத்தி உள்ளார் டெவால்ட் ப்ரீவிஸ். டெவால்ட் ப்ரீவிஸ் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணியால் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர் அந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக 5வது இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தார். SA20 தொடரின் தொடக்கத்தில் ப்ரீவிஸ் சற்று சொதப்பிய நிலையில், அவரது இடம் சந்தேகமானது. இந்த நிலையில், தனது நிரூபித்துள்ளார் டெவால்ட் ப்ரீவிஸ்.
CSK Team For IPL 2026: ஐபிஎல் 2026க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.
About the Author
R Balaji