சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், வீட்டில் இருந்தே ஸ்டார் 3.0 பத்திரப்பதிவு உள்பட 18 சேவைகளை இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் காரணமாக, இனிமேல் பொதுமக்கள் இனி வீடு, நிலம் வாங்க பத்திர பதிவு அலுவலகம் செல்ல தேவையில்லை. சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வகையில், 18 வகையான புதிய சேவைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு செய்யும் வசதி அறிமுகம். […]