சென்னை: சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதிய வேளையில், மிதமான குளிர்காற்றுடன் மழை பெய்தது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாள்களாக சிலுசிலுவென குளிர்ந்த காற்றும், காலை உறைபனியும் மனதிற்கு இதமான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் மக்கள் அதிகாலையில் வெளியே தலைகாட்டாமல், நடைபயிற்சிக்கு செல்லும் பூங்காங்கள், […]