சென்னை: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளுக்கான விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசுஅறிவித்து உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை களையும் பொருட்டு விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழிப் பத்திரம் என்ற நடைமுறை இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு […]