Chennai Super Kings Latest News: இந்தியாவில் தற்போது 2025-26 அண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிரசாந்த் வீர், உத்தரபிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சூழலில்தான், பிரசாந்த் வீர் காயம் அடைந்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
Prashant Veer Injury: பிரசாந்த் வீர் காயம்
உத்தரபிரதேச அணி தற்போது ஜார்கண்ட் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டி நேற்று (ஜனவரி 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று 30வது ஓவரின்போது, மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பு இந்த சம்பவம் நடந்தது. ஜார்கண்ட் வீரர் ஷிகர் மோகன் அடித்த கடினமான ஷாட்டை நிறுத்த, மிட் – ஆப் சைடில் ஃபீல்டிங் நின்ற பிரசாந்த் வீர் டைவ் செய்து முயற்சி செய்தார். பந்தையும் நிறுத்திவிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
CSK Player Prashant Veer: பிரசாந்த் வீர் ஐபிஎல் விளையாடுவாரா?
இதையடுத்து உடனடியாக பிசியோ களத்திற்கு விரைந்து முதல் உதவி செய்தனர். இருப்பினும் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஸ்கேன் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பிரசாந்த் வீருக்கு எத்தனை ஓய்வு தேவை ஐபிஎல்லுக்குள் குணமடைந்து விடுவாரா? அப்படி குணமடைந்து வந்தாலும் தற்போது இருக்கும் ஃபாம்மிற்கு திரும்புவாரா போன்ற கேள்விகள் உள்ளன.
Prashant Veer: ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்ட பிரசாந்த் வீர்
2026 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக கடந்த டிசம்பர் மாதம் இத்தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் வீர்ரின் உள்ளூர் செயல்பாடுகளை மனதில் வைத்து அவரை ரூ. 14 கோடிக்கு வாங்கியது. இந்தியக்காக இதுவரை விளையாடாத ஒருவர் இத்தனை கோடிக்கு விலைபோன விலைபோனது இதுவே முதல் முறையாகும்.
Ravindra Jadeja: ராஜஸ்தான் ராயல்ஸ் சென்ற ரவீந்திர ஜடேஜா
இந்த நிலையில், பிரசாந்த் வீரர் காயமடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றுவிட்டார். அவருக்கு மாற்று வீரராக பிரசாந்த் வீர் பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது காயமடைந்துள்ளார். பிரசாந்த் வீர் ஐபிஎல்லுக்குள் குணமடைந்துவிட்டால் சரி. ஒருவேளை அவர் குணமடைய தாமதம் ஆனாலோ அல்லது குணமடைந்து அவரது ஃபார்ம் மோசமாக இருந்தாலோ அவருக்கான வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது.
Ravindra Jadeja Replacement In CSK: பிரசாந்த் வீர் இல்லை என்றால் யார்?
ஒருவேளை ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக பிரசாந்த் வீர் இல்லை என்றால் அகீல் ஹொசைன் அவருக்கு பதிலாக விளையாடுவார் என தெரிகிறது.
2026 IPL CSK Full Squad: 2026 ஐபிஎல்லுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.
About the Author
R Balaji