இந்திய அணியில் இனி இவருக்கு மட்டுமே அதிக சம்பளம் – ஏன் தெரியுமா?

India National Cricket Team: வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ பெரிய மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் A+ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

Add Zee News as a Preferred Source

Team India: வீரர்களின் ஆண்டு வருமானம் 

வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலில் A+, A, B, C உள்ளிட்ட நான்கு அடுக்குகள் உள்ளன. இதில் ஒரு ஆண்டுக்கு A+ அடுக்கில் உள்ள வீரர்களுக்கு ரூ.7 கோடியும், A அடுக்கில் உள்ள வீரர்களுக்கு ரூ.5 கோடியும், B அடுக்கில் உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடியும், C அடுக்கில் உள்ள வீரர்களுக்கு ரூ.1 கோடியும் வழங்கப்பட்டு வருகின்றன.

Team India: A+ அடுக்கை தூக்கும் பிசிசிஐ

இந்நிலையில், வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலில் A+ அடுக்கை நீக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ கௌரவ செயலாளர் தேவ்ஜித் சைகியா கூறுகையில், “இந்தத் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும். A+ அடுக்குக்கு தகுதி பெற்ற வீரர்கள் இப்போது மூன்று பார்மட்களில் ஒன்றில் மட்டுமே விளையாடுவதால், ஒரு பிரிவை நாங்கள் நீக்குகிறோம். ஒரு வீரரை A+ அடுக்கில் பொருத்துவதற்கு நாங்கள் நிர்ணயித்த அளவுகோல்களை அவர்களால் பூர்த்தி செய்ய இயலவில்லை” என்றார். 

A+ பிரிவில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓடிஐ போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள். ஜடேஜா டி20ஐ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே மூன்று பார்மட்களிலும் தற்போது தொடர்ந்து விளையாடும் வீரராக இருக்கிறார்.

Team India: போதுமான வீரர்கள் யாருமில்லை…

இதுகுறித்து தேவ்ஜித் சைகியா மேலும் கூறுகையில், “அந்த A+ அடுக்கில் இருந்த சில வீரர்கள் மூன்று வடிவங்களிலும் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். எனவே, தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யவும் போதுமான வீரர்கள் யாருமில்லை. ஒரு பார்மட்டில் மட்டும் விளையாடும் வீரர் A+ அடுக்குக்கு தகுதி பெற மாட்டார், அதனால்தான் நாங்கள் இந்த ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. எந்த பிரச்னையும் இல்லை.” என்றார்.

Team India: ஜஸ்பிரித் பும்ரா மட்டும்…

அதாவது அனைத்து பார்மட்களிலும் விளையாடக்கூடிய வீரர்களுக்கு மட்டுமே ரூ.7 கோடி வருடாந்திர வருமானத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே இனி ரூ.7 கோடி வருமானத்தை பெறுவார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் B அடுக்கில் மாற்றப்படலாம், அவர்களுக்கு ரூ.3 கோடி வழங்கப்படும்.  

மேலும் படிக்க | விலகியது வங்கதேசம்… ஸ்காட்லாந்துக்கு அடிச்சது ஜாக்பாட் – டி20 உலகக் கோப்பையில் அதிரடி மாற்றம்!

மேலும் படிக்க | சுப்மன் கில் நீக்கம்? மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் ரோஹித் சர்மா?

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை.. இந்தியா பிளேயிங் 11ல் இஷான் கிஷனுக்கு இடம் கிடைக்குமா? முழு விவரம்

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.