பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிலிங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி பகிரப்பா (வயது 28). இவருக்கும் ராஜேஸ்வரி (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை. இதனால் அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், தனது சகோதரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை சந்திக்க ராஜேஸ்வரி நேற்று தனது தாயார் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால், ராஜேஸ்வரி தாயார் வீட்டிற்கு செல்ல கணவர் பகிரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பகிரப்பா வீட்டில் இருந்த கயிறால் மனைவி ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று மனைவியை கொன்ற பகிரப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.