விஜய் நடிப்பில், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ‘பகவதி’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.
சினிமா விகடன் யூட்யூப் சேனலின் ‘ரீவைண்ட்’ தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

‘பகவதி’ திரைப்படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடையே பகிர்ந்தவர், அப்படத்தில் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகக் கூறினார்.
இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசுகையில், “‘பகவதி’ திரைப்படத்திற்கு முதலில் ஜெய் நடித்திருக்கும் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷ் சாரை கேட்கலாம்னு நினைச்சிருந்தேன்.
அப்போ அவருக்கு ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வந்திருந்தது. அந்த உருவம் விஜய் சாரின் தம்பி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும்னு கேட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம்.
அப்போ அவர் ‘காதல் கொண்டேன்’ படத்துல நடிக்கத் தயாராகிட்டு இருந்தாரு. தயாரிப்பு நிறுவனம் மூலம் தனுஷ் சாரை மீட் பண்ணி பேசினோம்.
தயாரிப்பு நிறுவனத்துல இருந்து நான் அவருக்கு கதை சொல்லணும்ன்கிறதைத்தான் சொல்லியிருப்பாங்க போல. அவரும் என்கிட்ட கதை கேட்டுட்டு, இதுல நான் என்ன பண்றேன்னு கேட்டாரு.

நான் அவரை வச்சு படம் பண்றேன்னு நினைச்சுதான் வந்திருக்காரு. அப்புறம் நான் விஜய் சார் தம்பி கேரக்டருக்குதான் உங்களைக் கூப்பிட்டோம்னு சொன்னேன். அவர் ‘இல்லை சார். நான் அது மாதிரி பண்றதில்ல’னு சொல்லிட்டாரு. அவரை ஒத்துக்க வைக்கலானு எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது.
‘நீங்க இதை பண்ணினா நல்லா இருக்கும். விஜயகாந்த் சார் எப்படி விஜய் சாரை பி & சி ஆடியன்ஸுக்கு கூட்டிட்டு போனாரோ, அப்படி உங்களை இந்தப் படம் பி & சி ஆடியன்ஸுக்கு கூட்டிட்டுப் போகும்’னு சொன்னேன்.
‘காதல் கொண்டேன்’ படம் வந்தாலே நான் பி & சி பகுதிகள்ல இறங்கிடுவேன்’னு சொன்னாரு. அப்போதே இந்தத் தெளிவான பதிலை அவர் சொன்னாரு.” எனக் கூறினார்.