India vs New Zealand 3rd T20I Highlights: நியூசிலாந்து அணி இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஓடிஐ தொடரை 1-2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது. தற்போது டி20ஐ தொடர் நடைபெற்று வருகிறது.
Add Zee News as a Preferred Source
India vs New Zealand 3rd T20I: இந்திய அணியின் மாற்றம்
ஏற்கெனவே முதலிரண்டு டி20ஐ போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கௌகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் இன்று நடைபெற்ற 3வது டி20ஐ போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பதில் ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
India vs New Zealand 3rd T20I: பிலிப்ஸ், சேப்மேன் ஆறுதல்
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் கான்வே 1, ரச்சின் ரவீந்திரா 4 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிம் சைஃபர்ட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், பவர்பிளே முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 36 ரன்களையே அடித்தது. ஆனால், நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 52 ரன்களை நியூசிலாந்து சேர்த்தது.
ஆனால் இந்த ஜோடியை ரவி பிஷ்னோய் பிரித்தார். மார்க் சேப்மேன் 23 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டேரில் மிட்செல் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதத்தை நெருங்கிய கிளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் என 48 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
India vs New Zealand 3rd T20I: 154 ரன்கள் இலக்கு
இறுதியில் சான்ட்னர் 17 பந்துகளில் 27 ரன்களை அடித்து ஆறுதல் அளிக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை அடித்தது. ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டையும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
India vs New Zealand 3rd T20I: பவர்பிளேவில் 94 ரன்கள்
ஆனால், இந்திய அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சஞ்சு சாம்சன் டக்அவுட்டானார். அடுத்து இஷான் கிஷன் களமிறங்கி அதிரடி காட்டினார். அவர் 13 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா – சூர்யகுமார் யாதவ் ஜோடி மிரட்டலான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இந்திய அணி பவர்பிளேவில் 94 ரன்களை அடித்து மிரட்டியது.
India vs New Zealand 3rd T20I: தொடரையே இழக்காத இந்திய அணி
மேலும், இந்த ஜோடி 10 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து, 10 ஓவர்கள் மிச்சம் வைத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றுள்ளது. மேலும், 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ஒரு டி20ஐ தொடரை கூட இழக்கவில்லை என்ற சாதனையை இந்தியா தக்கவைத்திருக்கிறது.
India vs New Zealand 3rd T20I: அதிவேக சேஸிங்
மேலும், 150 ரன்களுக்கு மேலான டார்கெட்டை அதிக பந்துகள் மிச்சம் வைத்து அடித்த அணியாக இந்திய அணி உருவெடுத்துள்ளது. இதற்கு முன் 2024ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மேற்கு இந்திய தீவுகள் அணி 37 பந்துகள் மிச்சம் வைத்து 150+ ரன்களை சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. ஆனால், அதை இந்தியா தற்போது முறியடித்துள்ளது. இந்திய அணி கடந்த போட்டியில் 28 பந்துகளை மிச்சம் வைத்து 209 ரன்களை சேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
Simply excellent, with 10 overs to spare
A whirlwindicket victory for #TeamIndia in Guwahati
They clinch the #INDvNZ T20I series with an unassailable lead of
Scorecar https://t.co/YzRfqi0li2@IDFCFIRSTBank pic.twitter.com/zgp3FIz2o4
— BCCI (@BCCI) January 25, 2026
India vs New Zealand: அடுத்த போட்டி எப்போது?
இன்று அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் உடன் 68 ரன்களையும் (ஸ்ட்ரைக் ரேட் 340.00), சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உடன் 57 ரன்களையும் (ஸ்ட்ரைக் ரேட் 219.23) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். வரும் ஜன. 28ஆம் தேதி (புதன்) விசாகப்பட்டினம் நகரில் நான்காவது டி20ஐ போட்டி நடைபெற இருக்கிறது.
மேலும் படிக்க | விராட் கோலி சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா.. அடுத்தது ரோகித் சர்மாதான்! முழு விவரம்
மேலும் படிக்க | பாகிஸ்தான் அணிக்கு நிரந்தர தடை? இனி கிரிக்கெட் விளையாடவே முடியாது?
மேலும் படிக்க | இந்திய அணியில் இனி இவருக்கு மட்டுமே அதிக சம்பளம் – ஏன் தெரியுமா?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More