Cricket Latest News: டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் 07ஆம் தேதி தொடங்குகிறது. இம்முறை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், சமீபமாக பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
Add Zee News as a Preferred Source
Is Pakistan also exiting the T20 World Cup: டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தானும் விலகல்?
வங்கதேசம் அணி பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்தது. இதனால் அந்த அணியை டி20 அணியில் இருந்து நீக்கிவிட்டு அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணியை சேர்த்துள்ளது ஐசிசி. இந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தியும் வெளியாகி உள்ளது. அதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.
பாகிஸ்தான் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தலைவர் மோஷின் கான் நக்வி செய்தியாளர்களை சந்தித்து டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்குமா இல்லையா என்பது குறித்து பேசினார். அவர் கூறியதாவது, நாங்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்வோமா அல்லது மாட்டோமா என்பதை எங்கள் அரசுதான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தற்போது வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். அவர் வந்ததும் இது தொடர்பான ஆலோசனை நடத்தப்படும். அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுவே இறுதியானது.
எங்கள் நாட்டு அணியை அவர் விளையாட அனுமதித்தால் பிரச்சனை இல்லை. ஒருவேளை அவர் அனுபதி மறுத்துவிட்டால், அவர்கள் எங்களுக்கு பதிலாக வேறு அணியை எடுத்துக்கொள்ளலாம். எங்களிடம் வெவ்வொறு திட்டங்கள் உள்ளன. ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி விவகாரத்தில் இதுபோன்ற குழப்பங்களை நாங்கள் கையாண்டுள்ளோம். எனவே இதையும் எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என கூறினார்.
Mohsin Naqvi Attacked India: ஐசிசியை ஒரு குறிப்பிட்ட நாடு ஆட்டிப்படைக்கிறது
தொடர்ந்து பேசிய அவர், டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் வங்கதேசத்திற்கு நடந்திருப்பது அநியாயம். இந்தியா – பாகிஸ்தான் நடக்கும் போட்டியின் மைதானத்தை மாற்றும் ஐசிசி, ஏன் வங்கதேசத்திற்கு மட்டும் மறுப்பு தெரிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம். கிரிக்கெட்டில் வங்கதேசம் ஒரு முக்கியமான நாடு அல்லவா? ஐசிசியை ஒரு குறிப்பிட்ட நாடு மட்டும் ஆட்டிப்படைக்கிறது என மறைமுகமாக இந்தியாவை குற்றம் சாட்டினார்.
என்ன நடக்கப்போகிறது?
பாகிஸ்தான் பாகிஸ்தான் உள்துறைக்கான மத்திய அமைச்சராகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருக்கும் மோஷின் ராசா நக்வி இவ்வாறு தெரிவித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் அணியும் கலந்துக்கொள்ளவில்லை என்றால் ஐசிசி பெரும் பொருளாதார பாதிப்பை சந்திக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
About the Author
R Balaji