Hardik Pandya Latest News: இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடி வருகிறார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர், தற்போது இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். பிப்ரவரியில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறார்.
Add Zee News as a Preferred Source
விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ஹர்திக் பாண்டியா சாதனை
நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டும் அவர் எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் மிகவும் முக்கியமான வீரர் என்பதால், அவரை இந்திய அணி நிர்வாகம் மிகவும் கவனமுடன் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடியதன் மூலம் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவனாக திகழும் விராட் கோலியின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
அதாவது, சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் விளையாடியதில் ஹர்திக் பாண்டியா விராட் கோலியை பின்னுக்கு தள்ளி உள்ளார். இந்த பட்டியலின் முதல் இடத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். அவர் 159 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவரை தொடர்ந்து விராட் கோலி 125 ஆட்டங்களில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில்தான், ஹர்திக் பாண்டியா 126 டி20 போட்டிகளில் விளையாடி மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
ரோகித் சர்மாவையும் முறியடிக்க வாய்ப்பு
ஹர்திக் பாண்டிய டி20ல் 126 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர், 2027 ரன்களையும் 103 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால், ஹர்திக் பாண்டியா டி20ல் அதிக போட்டிகளில் விளையாடி ரோகித் சர்மாவையும் முந்த வாய்ப்புள்ளது. மேலும், ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பட்டியலில் 103 விக்கெட்களை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji