இந்தியா – நியூசிலாந்து 4வது டி20 எப்போது, எங்கு, நேரலையாக பார்ப்பது எப்படி?

India vs New Zealand 4th T20: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைத் தன்வசப்படுத்தியுள்ளது. இப்போது இந்திய அணியின் மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை முழுமையாக (5-0) கைப்பற்ற வேண்டும், நியூசிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. ஏனென்றால்,  அந்த அணி ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பதால் டி20 தொடரில் ஒயிட்வாஷ் செய்து, வாங்கிய அடிக்கு பரிகாரம் தேடும் எண்ணத்தில் இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டம்

நடந்து முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 154 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, வெறும் 10 ஓவர்களிலேயே மேட்சை முடித்தது. இப்போட்டியில் இளம் வீரர் அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 68 ரன்கள் விளாசி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவும் தன் பங்கிற்கு 26 பந்துகளில் 57 ரன்கள் குவித்து மேஜிக் காட்டினார்.

சஞ்சு சாம்சன் – 4வது போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா?

ரசிகர்களின் பெரிய விவாதமாக இருப்பது சஞ்சு சாம்சனின் ஃபார்ம் தான். இந்தத் தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கும் பொன்னான வாய்ப்பைப் பெற்றும், சஞ்சு அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. முதல் போட்டியில் 10 ரன்கள், இரண்டாவது போட்டியில் 6 ரன்கள், மூன்றாவது போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ‘டக் அவுட்’ என சொதப்பியது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இருப்பினும், திலக் வர்மா காயத்தில் இருந்து மீண்டிருந்தாலும், மருத்துவக் குழு அவரை அவசரமாகக் களமிறக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் விசாகப்பட்டினத்தில் நடக்கும் 4-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்பு அதிகம். இதுவே அவருக்குக் கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்பதால், தனது இடத்தைத் தக்கவைக்க இந்தப் போட்டியில் அவர் கட்டாயம் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். ஒருவேளை சஞ்சு நீக்கப்பட்டால், இஷான் கிஷன் தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது.

போட்டி எப்போது? எங்கே பார்க்கலாம்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி வரும் ஜனவரி 28,புதன்கிழமை அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ (ACA-VDCA) மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் மாலை 6.30 மணிக்கு போடப்படும். ஆனால், போட்டி இரவு 7 மணிக்கே தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக பார்த்து ரசிக்கலாம். ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி மற்றும் இணையதளம் வழியாக ஆன்லைனில் ஸ்டீரிமிங் பார்க்கலாம்

உத்தேச இந்திய அணி – அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.

தொடரை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, எஞ்சியுள்ள போட்டிகளில் வென்று தனது கௌரவத்தைத் தக்கவைக்கப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.