பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா ஒன்று 2025 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஒரு சொத்தை பத்திரப்பதிவு செய்யும்போது அதன் அசல் ஆவணங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டும் சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க […]