நாமக்கல்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து பேசிய அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூறினார். நாமக்கல் சாலப்பாளையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் […]