தென் கொரியாவிற்கு வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ஏன் இந்த உயர்வு?
இதற்கான பதிலை தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் கூறியுள்ளதாவது…
“நமக்கு நம்முடைய வர்த்தக ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் என்ன முடிவாகி உள்ளதோ, அதைப் பொறுத்து அந்தந்த நாடுகளுக்கு உடனடியாக வரிகளைக் குறைத்து வருகிறோம். இதை நமது வர்த்தகக் கூட்டாளிகளும் நமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆனால், தென் கொரியா அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை. 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி, நானும், அதிபர் லீயும் இரு நாடுகளுக்கும் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டோம்.

2025-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி, நான் கொரியா சென்றிருந்தபோதும், ஒப்பந்தத்தை மறுபடியும் உறுதிப்படுத்தினேன்.
பின், ஏன் இன்னும் கொரிய சட்டமன்றம் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை?
இதனால், தென் கொரியாவில் இருந்து வரும் ஆட்டோமொபைல்கள், மருத்துவம் சார்ந்த பொருள்கள், மரக்கட்டைகள், பரஸ்பர வரிகளை 15 சதவிகித வரியில் இருந்து 25 சதவிகித வரியாக உயர்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.