இந்தியாவின் எரிசக்தி (Energy) துறை, 500 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 45 லட்சம் கோடி) அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ‘இந்தியா எனர்ஜி வீக் 2026’ நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிரதமர், எரிசக்தி தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா இந்த துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ள நாடாக மாறியுள்ளது […]