டெல்லி: திருச்சி இளைஞரின் கவிதை புத்தகம் வெளியீடு – மத்திய அமைச்சர்கள், நடிகை ஹூமா குரேஷி பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எழுதிய சுய முன்னேற்றம் குறித்த கவிதை புத்தகம் கோலாகலமாக வெளியிடப்பட்டது.

புத்தகத்தின் பெயர்: என்கிரேட்டியா (ENKRATEIA)

ஆசிரியர்: கவிஞர் ஜோசன் ரஞ்சித் (திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமம்)

பொருள்: சுய முன்னேற்றம், சுய வளர்ச்சி மற்றும் சுய ஒழுக்கம் சார்ந்த கவிதைகள்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கவிஞர் ஜோசன் ரஞ்சித் எழுதிய “ENKRATEIA” என்ற கவிதை புத்தகத்தை மத்திய அமைச்சர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.

கவிதை புத்தகம் வெளியீடு
கவிதை புத்தகம் வெளியீடு

மத்திய அமைச்சர்கள் ராஜ் பூஷன் சௌத்ரி, ஸ்ரீபட் நாயக், சதீஷ் புனியா மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்த விழாவில் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கியப் பிரதிநிதிகள் மற்றும் ஆளுமைகள் கலந்து கொண்டனர். ஒரு கிராமப்புற இளைஞரின் படைப்பு, நாட்டின் தலைநகரில் உள்ள பாரத் மண்டபத்தில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.