இந்திய அணியில் இவர் ரொம்ப முக்கிய.. மேட்ச் வின்னர் – ரோகித் சர்மா!

அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 07ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. மார்ச் 08ஆம் தேதி வரை நடக்கும் இத்தொடருக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பிராண்ட் அம்பாசிடராக ஐசிசி நியமித்துள்ளது. வீரர் ரோகித் சர்மா தலைமையில் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. அத்தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் 2025 மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற அவர் தற்போது ஒருநாள் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். 

Add Zee News as a Preferred Source

T20 World Cup 2026: இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லுமா? 

முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் வென்ற டி20 கோப்பையை வரும் டி20 உலகக் கோப்பையில் வென்று தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய கடுமையாக உழைத்து வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி தற்போது வரை டி20 போட்டிகளில் கலக்கி வருகிறது. 150 போன்ற டார்க்கெட்களை 10 ஓவரிலேயே அடித்து அசத்துவதால், இந்திய அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

Tilak Varma Injury Update: காயத்தால் அவதிபடும் திலக் வர்மா 

இந்த சூழலில், இந்திய அணியின் முக்கிய வீரர் திலக் வர்மா சமீபத்தில் காயமடைந்து ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. ஒருவேளை அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்படும் நிலையில், அதற்கான மாற்று வீரரையும் இந்திய தயார் செய்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, திலக் வர்மா குறித்து பேசி இருப்பது கவனத்தை பெற்றுள்ளது. 

Rohit Sharma: ரோகித் சர்மா பாராட்டு 

இது தொடர்பாக அவர் பேசுகையில், திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரும்போது அவரிடம் ஏதோ திறமை இருப்பதை நான் அறிந்தேன். அவருடைய ஆட்டிடியூட், கவனம் ஆகியவற்றை அவரது திறமையை காட்டியது. ஒருமுறை என்னிடம் வந்து என்னை பேட்டிங்கில் முன்கூட்டியே அனுப்புங்கள், நான் நிச்சயமாக சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என கூறினார். அதன்பிறகு அவரை டாப் ஆர்டரில் முயற்சித்தேன். அவர் அவரை நிரூபித்து காட்டினார். 

Rohit Sharma About Tilak Varma: திலக் வர்மா ஒரு மேட்ச் வின்னர் 

குறிப்பாக அணி தடுமாற்றத்தில் இருக்கும்போது, அழுத்தமான சூழலில், ரன்களை சேர்த்து நம்பிக்கை அளிப்பார். அது அவரிடம் இருக்கும் மிகப்பெரிய பிளஸ். உண்மையிலேயே அவர் சிறந்த பேட்டர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. தற்போது திலக் வர்மா இந்திய அணியிலும் அசத்தி வருகிறார். அணியின் முக்கிய வீரராக மாறி இருக்கிறார். அவர் ஒரு மேட்ச் வின்னர் என ரோகித் சர்மா அவரை பாராட்டினார். 

Tilak Varma Latest News: திலக் வர்மா டி20 உலகக் கோப்பை விளையாடுவாரா? 

திலக் வர்மா தற்போது வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் தற்போது வரை இந்திய அணியில் சேராத நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பிப்ரவரி 03ஆம் தேதி இணையலாம் என கூறப்படுகிறது. திலக் வர்மா இதுவரை 40 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 1183 ரன்களை 144.09 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்களும் அடங்கும். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.