மதுரை: கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டும் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், தற்போது, மதுரை கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு பிறப்பித்து உள்ளது. கோவில் நிதியைப் பயன்படுத்தி வணிக வளாகங்கள் கட்டக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் […]