Highest run-scorer for India in the T20 World Cup: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது. கடந்த முறை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற நிலையில், இம்முறை இந்தியா மற்றும் இலங்கை மைதானங்களில் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக இந்திய அணியை பொறுத்தவரையில், கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில், அதனை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இத்தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடிக்கப்போகும் வீரர் யார் என்பதை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார்.
சூரியகுமார் யாதவை தேர்வு செய்த ரெய்னா
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் ரெய்னா, வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் தான் அதிக ரன்கள் அடிப்பார் என உறுதியாக கூறினார். இதேபோல் முன்னாள் வீரர் இர்பான் பதானும், சூர்யகுமார் யாதவ் தான் அதிக ரன்கள் அடிப்பார் எனக்கு அவர் மேல் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது என கூறினார்.
அபிஷேக் சர்மாதான் அதிக ரன்கள் அடிப்பார்
முன்னாள் வீரர் முகமது கைஃப் மற்றும் சஞ்சய் பங்கர் ஆகியோர் திலக் வர்மாவை கைகாட்டி உள்ளனர். அவர்கள் திலக் வர்மாதான் அதிக ரன்கள் அடிப்பார் என கூறி உள்ளனர். அதேசமயம், அனில் கும்ப்ளே, புஜாரா ஆகியோர் அபிஷேக் சர்மாதான் அதிக ரன்கள் அடிப்பார். அவர் தற்போது செம ஃபார்மில் உள்ளார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் வீரர்களின் கணிப்பில் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடிக்கப்போகும் வீரர்களாக கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா உள்ளனர். இவர்கள் மூவருக்குமே இதற்கான வாய்ப்புகள் உள்ளன. அபிஷேக் சர்மாவை பொறுத்தவரையில் அவர் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து ஆடி வருகிறார்.
ஃபார்மிற்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ்
சூரியகுமார் யாதவ் கடந்த ஆண்டில் மிகவும் மோசமாக விளையாடிய அவர், டி20 உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் இந்த வேளையில் ஃபார்மிற்கு திரும்பி ரன்களை குவித்திருக்கிறார். அவர் ஃபார்மிற்கு திரும்பியது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திலக் வர்மா டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
திலக் வர்மாவை பொறுத்தவரையில், அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது தற்போது வரை சந்தேகத்திலேயே உள்ளது. ஒருவேளை அவர் வந்தாலும் நல்ல ஃபார்மில் இருப்பாரா என்பதை கூற முடியாது. அது அவரின் செயல்பாட்டின் மூலமே தெரியும்.
About the Author
R Balaji